உங்களது செய்தி பாதுகாப்பான கரங்களில் உள்ளது

குடும்பத்திற்குச் சொந்தமான இந்த வியாபாரத்தை 1913 ஆம் ஆண்டு முதல் தலைமுறை தலைமுறையாக நாங்கள் சிந்தித்துத் திட்டமிட்டு வருகிறோம். „நிறுவனம் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும்“ என்ற எமது குறிக்கோள்களை முழு மதிப்புச் சங்கிலியிலும் ஒருங்கிணைத்துக் கொள்கிறோம். எனவே, DEICHMANN இல் பணிபுரியும் நாங்கள் தனிநபர்கள், நிறுவனங்கள், வியாபாரப் பங்காளிகள், மற்றும் பிற தரப்பினரால் எழுப்பப்படும் கவலைகளை ஏற்று தொடர் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உறுதிபூண்டுள்ளோம்.

மனித உரிமை மீறல்கள், சுற்றுச்சூழல் பற்றிய கவலைகள், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள், மற்றும் பிற கவலைகள் போன்றவை நிகழும்போது, துரிதமான மற்றும் நம்பகமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. நீங்கள் விதிமீறலினால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது அதனைக் கவனித்திருந்தால், அது குறித்துப் புகாரளிப்பதற்கான எளிதான வழியை நாங்கள் வழங்குகிறோம். ஒவ்வொரு புகாரும், அதன் இரகசியத்தன்மை பேணப்பட்டு அநாமதேயமாக விசாரிக்கப்படும் என்பதற்கு நாங்கள் உத்தரவாதமளிக்கிறோம்.

உங்களிடமிருந்து நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம்?
1. பெயர் (நீங்கள் பெயர் குறிப்பிட விரும்பவில்லை என்றால் அநாமதேயமாக சமர்ப்பிக்கலாம். ஆனால், இது புகாரின் செயலாக்கத்தைக் கடினமாக்கி தாமதப்படுத்தலாம்).
2. தொடர்பு விபரம், உதாரணமாக தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, அல்லது அஞ்சல் முகவரி.
3. நீங்கள் வசிக்கும் நாடு மற்றும் நகரம். மேலும் பொருந்தும் பட்சத்தில், தயாரிப்புத் தளம் அல்லது இருப்பிடத்தைத் தெளிவாக அடையாளம் காண உதவும் பிற விபரங்கள்.
4. மனித உரிமைகள், சுற்றுச்சூழல், சுகாதாரம், அல்லது பாதுகாப்பு தொடர்பான அவதானிப்பு நிகழ்ந்த திகதி அல்லது நேரம் உள்ளிட்ட விரிவான விளக்கம். உங்களிடம் ஆதாரங்கள் இருப்பின் தயங்காமல் அவற்றைச் சமர்ப்பிக்கவும்.
5. புகார் அளித்தவர் அல்லது பாதிக்கப்பட்ட பிற தரப்பினர் அநாமதேயமாகவும் பாதுகாக்கப்படவும் வேண்டுமா என்பது பற்றிய விபரம்.

உங்களது புகாரை எழுத்துப்பூர்வமாக இங்கே சமர்ப்பிக்கவும்.

உங்களது புகார் எவ்வாறு பரிசீலிக்கப்படுகிறது?
1. புகார் பற்றிய செய்தியைப் பெற்றுக்கொண்ட பிறகு 24 மணித்தியாளத்திற்குள் புகார் பெறப்பட்டதை நாங்கள் ஒப்புகை அளிக்கிறோம்.
2. DEICHMANN மனித உரிமைகள் அதிகாரி, புகாரின் காரணத்தை ஆராய்ந்து அதன் ஏற்புத்தன்மையை சரிபார்க்கிறார். புகார் ஏற்கத்தக்கதாகக் கண்டறியப்பட்டால், விரிவான விசாரணை நடத்தப்படும். மேலும், எதிர்பார்க்கப்படும் செயலாக்கக் காலம் குறித்து புகார் அளித்தவருக்குத் தெரிவிக்கப்படும்.
3. ஆழமான விசாரணை தேவைப்படின், DEICHMANN சம்பவ இடத்தில் சுயமாக ஆய்வை மேற்கொள்ளும் அல்லது அதை மேற்கொள்ள ஒரு சேவை வழங்குநரை நியமிக்கும். இந்த ஆய்வுகளுக்கான செலவுகளை DEICHMANN ஏற்கும்.
4. அதனைத் தொடர்ந்து, புகார் தொடர்பான இரு தரப்பினரதும் பரஸ்பர உடன்பாட்டின் பேரில் புகாருக்குத் தீர்வு காண முடியும். எந்த உடன்பாடும் சாத்தியமில்லை என்றால், அனைத்து அம்சங்களையும் விரிவாகப் பரிசீலித்த பிறகு புகாரின் முடிவைத் தீர்மானிக்கும் உரிமையை DEICHMANN கொண்டுள்ளது.
5. புகாருக்கான காரணமாக DEICHMANN குழுமத்தின் செயல்கள் அமைந்திருந்தாலோ அல்லது அதற்குப் பங்களித்திருந்தாலோ, குறித்த புகாரைத் தீர்ப்பதற்கும் அல்லது அதன் விளைவுகளைத் மட்டுப்படுத்துவற்கும், மேலும் அது மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் இயலுமான செயல்முறைகளைத் தொடங்குவோம்.

DEICHMANN Declaration of Principles regarding Respect for Human Rights

DEICHMANN Declaration of Principles pdf, 671.4kB

DEICHMANN நடத்தை விதிமுறைகள

நடத்தை விதிமுறைகள pdf, 2MB

DEICHMANN Rules of Procedure on the complaints procedure

Rules of Procedure  pdf, 340.6kB